Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் அறிக்கையால் கடுப்பான தொண்டர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

thalapathy vijay-statement-about-caa

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள விஜய் கண்டிப்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட பாஜக கொண்டு வந்துள்ள சிஏஏ என பாஜகவின் பெயரை குறிப்பிடவில்லை. இதைப் பார்த்து தான் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கடுப்பாகி உள்ளனர்.

ஒரு இடத்தில் கூட பாஜகவின் பெயரை பயன்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குக் கூட தைரியம் இல்லையா என நொந்து கொள்கின்றனர்.

thalapathy vijay-statement-about-caa
thalapathy vijay-statement-about-caa