தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல பிசினஸ்களை தன் கைவசம் வைத்து வருகிறார்.
மேலும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் வகையில் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்தி வரும் இதை மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உற்சாகப்படுத்தினார். இப்படி அரசியலில் வலுவான அடித்தளம் அமைக்க முயற்சித்து வரும் விஜய் புதியதாக நியூஸ் சேனல் தொடங்க இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இது குறித்து விசாரிக்கையில் இது முழுக்க முழுக்க தவறான தகவல் என தெரியவந்துள்ளது. நியூஸ் சேனல் தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயின் அரசியல் வருகையை இதுவரை யாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


