Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நீங்கள் சொல்லுங்கள் நான் செய்து முடிக்கிறேன்”: விஜய் ஓபன் டாக்

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் பாட்டு பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார். இத்துடன் தனது அரசியல் வருகை குறித்தும் சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.

அப்படியாக, ” புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான், புரட்சி கலைஞர்-னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலகநாயகன்-னா ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார்-னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான்,” என்று தெரிவித்தார்.

மேலும் தளபதி குறித்து பேசிய விஜய், “என்னை பொருத்தவரை தளபதி என்பவர், மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவர். எனக்கு மன்னர்கள் மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் சொல்லுங்கள், நான் செய்து முடிக்கிறேன்,” என்று கூறினார்.

Thalapathy Vijay latest speech Viral
Thalapathy Vijay latest speech Viral