Thalapathy Vijay in Varisu Movie Latest Update
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் விஜய்யின் வழக்கமான ஆக்சன் படம் போல் இல்லாமல் குடும்ப செண்டிமெண்டில் உருவாகி வருகிறது.
மூன்று அண்ணன் ஒரு தம்பி என்று குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் மழை காரணத்தால் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜயின் கால்ஷீட் வீணாக்கியதால் அவர் வருத்தப்பட்டுள்ளார். அதனால் இயக்குனர் வம்சி அந்த நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய படப்பிடிப்பை இரண்டே நாட்களில் முடித்துக் காட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…