தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் இருந்து அதன் பிறகு தேமுதிக கட்சி மூலம் அரசியலில் மூன்றாவது முக்கிய தலைவராக இடம் பிடித்தார் விஜயகாந்த்.
இதையெல்லாம் தாண்டி நல்ல மனிதர் என மக்கள் மத்தியில் நான் மதிப்பை பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைபாடு காரணமாக முடங்கி இருந்த நிலையில் நேற்று காலமானார்.
கோயம்பேட்டில் உள்ள இவரது கட்சி அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்தது. திரை உலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை விரைந்து விஜய் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டார். இந்த நிலையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காரணமாக விஜயகாந்த் உடல் தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிகாலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி தேம்பி தேம்பி அழுதார். அதன் பிறகு அஞ்சலி செலுத்த வந்த விஜய் ஆண்டனி ஹேமலதா விஜயகாந்த்துக்கு ஆறுதல் கூறி விஜயகாந்தின் காலுக்கு முத்தமிட்டு கண்ணீர் விட்டு ஆறுதல் கூறியுள்ளார்.
இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்து வருகின்றன.
#ThalapathyVijay @actorvijay a rendu un dernier hommage au Captain Vijayakanth ????❤️ #RIPVijayakanth pic.twitter.com/f0QILqPG6P
— Vijay France ???????? (@VijayFansFR) December 28, 2023
தடுப்புகளை தாண்டி குதித்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி#Chennai #RIPVijayakanth #VijayakanthDeath #CaptainVijayakanth #VijayAntony #NewsTamil24x7 pic.twitter.com/1GT18hy00m
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 28, 2023