சென்னை உட்பட பல்வேறு நகராட்சிகளில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் அவருடைய வாக்கை பதிவு செய்ய வாக்கு சாவடிக்கு சென்று உள்ளார்.
தளபதி விஜயின் வருகையால் வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு அதன் காரணமாக அவர் வாக்குச்சாவடியில் மக்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்தார் தளபதி விஜய் இந்த முறை காரில் சென்று வாக்களித்துள்ளார்.
தான் வாக்களிக்க வந்த நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்காக மற்றவர் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்ட தங்கத் தளபதி! @actorvijay | @BussyAnand #ThalapathyVijay #VijayMakkalIyakkam #VoteForVMI pic.twitter.com/ftk42wZc7G
— Ilaya Thamizhan Ramesh (@SriRamesh_Off) February 19, 2022