Thalapathy Vijay Answer About Election 2021
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தளபதி விஜய் குட்டி கதை சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதற்கு பதிலாக தளபதி விஜய் சன் டிவியில் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியை நெல்சன் அவர்களே தொகுத்து வழங்கியுள்ளார். ஏப்ரல் 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான புரோமோ வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஒரு வீடியோவில் 4 கார் இருக்கும்போது ஏன் சைக்கிளில் சென்று ஓட்டு போட்டீர்கள் என நெல்சன் கேட்க கொஞ்சம் சும்மா இருக்கியா என பதில் அளிக்கிறார் விஜய். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…