Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படம் குறித்து வெளியான தரமான தகவல், உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்துள்ளார். இது படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது. ஏற்கனவே இந்த படத்தின் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் இருப்பதாக தகவல் பரவி இருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் என்று காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த படத்தை விஜய் டபுள் ஆக்சன் மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு ரோலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Thalapathy Vijay Acts Triple Role in Goat Movie
Thalapathy Vijay Acts Triple Role in Goat Movie