தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான பாடல்களின் சாதனையை இந்தப் பாடல் முறியடித்து வருகிறது.
இந்த பாடலை கேட்ட தளபதி விஜய் பாடல் சூப்பராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் பாடலை எழுதிய சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
