Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிடிக்காத நடிகர் யார் என பேட்டியில் விஜயிடம் கேட்ட கேள்வி.. பதில் அளித்த விஜய்

thalapathy-vijay-about-actors details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். தலைவா படம் வரை ஒவ்வொரு படத்துக்கும் டிவி சேனலில் பேட்டி அளித்து வந்தார்.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பீஸ்ட் படத்துக்காக தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். இந்த நிலையில் இவர் போக்கிரி பட ப்ரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது உங்களுக்கு பிடிக்காத நடிகர் யார் என கேட்க எல்லா நடிகரையும் பிடிக்கும். எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கும் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 thalapathy-vijay-about-actors details

thalapathy-vijay-about-actors details