thalapathy-68 movie shooting-exclusive-updates
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தொடங்கி தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. லியோ திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னரே இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…