Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

thalapathy-67 movie title-update

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு நான் வாழும் உலகம் என டைட்டில் வைக்கலாம் என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. படத்தில் ஆக்சன் படு பயங்கரமாக இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

thalapathy-67 movie title-update
thalapathy-67 movie title-update