தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் தளபதி 66 படத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஜா தயாரிக்கிறார். தமன்னா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்டோர் விஜய் அண்ணனாக நடிக்க உள்ளனர் என சொல்லப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என தெரியவந்துள்ளது.
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆதிரா வேடத்தில் நடித்து மிரட்டிய சஞ்சய் தத் தான் இப்படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
