Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 66 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Thalapathy 66 Heroine Details

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 66 Heroine Details

Thalapathy 66 Heroine Details