தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இவரின் பிகில் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்திய அளவில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கபட்டது.
இதனால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலமாகவே தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் அவர்களும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தளபதி விஜய்யின் திரைப்படங்களை அதிகமுறை ஒளிபரப்பி உள்ளனர். மேலும் எந்தெந்த தொலைக்காட்சி எத்தனை தளபதி விஜய்யின் திரைப்படங்களை ஒளிபரப்பியுள்ளனர் என காண்போம்.
1.ஜெயா டி. வி – 58 படங்கள்
2. சன் டி. வி – 47 படங்கள்
3. விஜய் டி. வி – 14 (நண்பன் + துப்பாக்கி)
4. ஜீ தமிழ் – 8 (மெர்சல்)
5. மற்ற தொலைக்காட்சிகள் – 23 படங்கள்
மொத்தம் – 150 முறை தளபதி விஜய்யின் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி உள்ளனர்.

