thalapathi-vijay-varisu-movie-ott-release
ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் தீவிரமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் ஒரு சில அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படம் குறித்த சூப்பரான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதன்படி வாரிசு திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக எக்ஸ்ப்ளூசிவான தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…