Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தில் ஷாருக்கான். இணையத்தை கலக்கும் அப்டேட்

thalapathi-68 movie update-viral

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படமான தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வர இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படமான தளபதி 68 குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 திரைப்படத்தை விஜயின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குனருமான அட்லீ இயக்க இருப்பதாகவும் இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் தரமான அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.

thalapathi-68 movie update-viral
thalapathi-68 movie update-viral