Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

thalapathi-68-movie-latest-update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்பினை படக்குழு ஏற்கனவே அதிகாரவபூர்வமாக அறிவித்திருந்தது.

இப்படம் தொடர்பான அப்டேட் இருக்காத ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் “தளபதி 68” படத்திற்கான VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜெகதீஸ் ஆகியோருடன் இணைந்து இன்று வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

thalapathi-68-movie-latest-update
thalapathi-68-movie-latest-update