தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்திருக்கிறார்.
வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ₹160 கோடிக்கு நெட்பிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ₹80 கோடிக்கு சன் டிவியும் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூப்பரான தகவல் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Thalapathy67 rights gone for a whopping price even before the official announcement of the film ????????
Digital rights to Netflix for 160 crores.
Satellite Rights to Sun TV for 80 crores.MASSIVE!
— Siddarth Srinivas (@sidhuwrites) November 24, 2022