Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.! வைரலாகவும் புதிய தகவல்

thalapathi 67 movie latest update

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்படம் குறித்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இப்படம் குறித்த வேற லெவல் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி தளபதி 67 படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.