Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்கு ஜோடியாக தளபதி67 இணையும் பிரபல நடிகை யார் தெரியுமா.? வைரலாகும் தகவல்

6-villians-in-thalapathy-67-movie update

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கி வரும் “வாரிசு” திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோல் தற்போது தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயினி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தில் சீனியர் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் 3 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் அதில் மலையாள நடிகர் பிருத்விராஜூம் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள் இப்படத்தின் உறுதியான தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

thalapathi 67 movie heroine update
thalapathi 67 movie heroine update