Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

thalapathi-67-movie-heroine-details

தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது விஜயின் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் அப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும்
சமீபத்தில் இப்படத்தில் சமந்தா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘டாக்டர்’ படம் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த உறுதியான தகவல்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் எதிர்பார்க்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

thalapathi-67-movie-heroine-details
thalapathi-67-movie-heroine-details