Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க போவது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தில் தயாரிப்பில் அனிருத் திசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கழுகு, ராணா, கோல்ட் அல்லது கடிகாரம் என நான்கு பெயர்கள் சமூக வலைதளங்களில் வளம் வருகின்றன. இந்த நான்கில் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

இப்படியான நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் மகளாக உலக நாயகன் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டில் டீசர் வெளியான பிறகு அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.

Thalaivar 171 movie latest update viral
Thalaivar 171 movie latest update viral