தலைவர் 170 குறித்து வெளியான தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக பயணத்திற்காக இமயமலைக்கு சென்று இருக்கிறார்.

இப்பயணத்தை நிறைவு செய்து விரைவில் சென்னை திரும்ப இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்ததை தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் நானி இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thalaivar-170-movie-update
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

1 day ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

1 day ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

1 day ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

1 day ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

1 day ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

1 day ago