தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது அனைவரும் அறிந்ததே.
கே ஜி எஃப் படத்தின் மூலம் கன்னட சினிமா உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறி இருப்பதன் காரணமாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டால் நிச்சயம் அது வேற லெவல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
