தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை இந்த படம் உருவாகும் ஆகாதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் படம் இவர்களது கூட்டணியில் வெளியாவது உறுதி என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல நேற்று மாலை இந்த படம் பற்றிய அதிரடி அறிவிப்பு இன்று காலை பதினொரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் ஜெயிலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial @RIAZtheboss @V4umedia_ pic.twitter.com/Tby29U4QsU
— Kalakkal Cinema (@kalakkalcinema) June 17, 2022