தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தலைவர் 169 என்ற படத்தை இயக்க உள்ளார் நெல்சன் திலீப் குமார்.
இந்த நிலையில் தற்போது இவர் பீஸ்ட் பட புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் ரஜினியை இயக்குவதற்கு விஜய் தான் காரணம் என கூறியுள்ளார். ஆனால் இது பற்றி வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த படம் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
