Tamilstar
Health

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பத்து உணவுகள்..!

Ten foods that control diabetes..!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகளை குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம். எந்தெந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும் என பார்க்கலாம்.

முதலாவதாக சேர்த்துக் கொள்ள வேண்டியது கீரை வகைகள். இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த பெர்ரி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

மீன் வகைகளான மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். குறிப்பாக நட்ஸ் வகைகளான பாதாம் ,முந்திரி ,பிஸ்தா போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை உறிஞ்ச பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது மற்றும் கிரேக்க தயிர் சாப்பிடுவதால் தேவையான புரதம் கிடைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும்.

குறிப்பாக ஆலிவ் எண்ணெய் நீரிழிவு நோயாளிக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த இலவங்கப்பட்டை பயன்படுகிறது.