நீரிழிவு நோயாளிகளுக்கு டாரோ ரூட் ஜூஸ் பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு நோய் வந்தால் உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம். நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று சேர்க்கக் சேப்பங்கிழங்கு. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இலையில் இருக்கும் சத்துக்கள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா? இந்த இலையை ஜூஸ் போட்டு குடித்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த இலையில் மெக்னீசியம், பொட்டாசியம், துத்த நாகம் ,தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமில்லாமல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது.
எனவே சேப்பங்கிழங்கு இலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.