கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷம் பெருமையும் கூட. இந்த அரசு ரொம்ப காலமாகவே நம்மை படிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது. அடுத்த தலைமுறைக்கு வேறெதையும் கொடுப்பதை விட கல்வி மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அவரின் குடும்பம், அடுத்த தலைமுறையினர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்கள். அதற்கு முக்கியமான பங்கை இந்த அரசு மீண்டும் மீண்டும் செய்கிறது.

ஒருத்தருடைய வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கும் அறிவின் மூலம் தான். அறிவை வைத்தே அவர்களின் முன்னேற்றம் நிகழ்கிறது. அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடைத்து ஒருவரை முன்னேறி நகர்த்தி செல்வதில் தமிழக அரசு பெரும் பங்கு வகிக்கிறது’ என்றார்.

நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஏஐ வளர்ச்சி கட்டத்தில் அரசு ஒரு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம். இதை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால், பல தொழில் முனைவோர்கள் இந்தியாவில் இது வளர்ச்சி அடையும் என கூறுகின்றனர்’ என்றார்.

Tamil Nadu is a state that gives importance to education.. Vijay Sethupathi-Karthi thanks..
dinesh kumar

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago