இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு இருந்தாலும் கொரோனா தொற்று குறைவதாக தெரியவில்லை.
பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.
இவரின் தாய் மற்றும் தந்தைக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தனது இன்ஸ்ட பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

