தமன்னாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி.. பதில் அளித்த தமன்னா.. வைரலாகும் பதிவு

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் தான் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் “வியாபாரி” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாகவும் வளம் வர ஆரம்பித்தார். அதன் பிறகு பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுறா, படிக்காதவன், வீரம், அயன் போன்று பல படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான விஷாலின் “ஆக்சன்” திரைப்படம் ரசிகர்களிலேயே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதன் பிறகு தனது முழு கவனத்தையும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் செலுத்தி வரும் தமன்னா அதிக படங்களை புக் செய்து வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மும்பை டிராபிக்கில் படப்பிடிப்பிற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

அதில் பிடித்த உணவு தோசை, என்றும் விரைவில் தமிழில் நடிப்பேன் என்றும் ரசிகர்களின் ஏகப்பட்ட கேள்விக்கு க்யூட்டாக பதில் அளித்துள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் ‘கேன்ஸ்’ அனுபவம் பற்றி கேட்டுள்ளார். அதற்குஉலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகவே கேன்ஸ் திரைப்பட விழாவை பார்க்கிறேன் என்றும் அதில் தானும் ஒரு சிறு அங்கமாக கலந்து கொண்டது பெரும் சந்தோஷத்தை கொடுக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்குப் பிடித்த ரோல்னா எதை சொல்லுவீங்க என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த “தர்மதுரை” சுபாஷினி கதாபாத்திரம் ரொம்பவே பிடிக்கும் என்றார். அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் தான் நடித்த இளவரசி அவந்திகா கதாபாத்திரமும் மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்றும் தமன்னா கூறியுள்ளார். இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓப்பனாக பதில் அளித்திருக்கும் தமன்னாவின் இந்த பதிவுகளை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

Appo Ippo – Lyrical video

Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…

5 hours ago

மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடக்கூடாது.. வாங்க பார்க்கலாம்.!!

மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

8 hours ago

Aaromaley – Trailer

Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…

8 hours ago

Valluvan Movie Audio & Trailer launch | RK Selvamani | K Rajan

https://youtu.be/QC_9eRGrkjQ?t=1

9 hours ago

Messenger Movie Press Meet | Sreeram Karthick

https://youtu.be/g9_8p3ui0us?t=1

9 hours ago

Thaarani Movie Audio & Trailer Launch

https://youtu.be/oXvWmYMZOoI?t=10

9 hours ago