Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும் – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும் – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எப்.’ படத்தில் யாஷ் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3′ படங்களில் நடித்தார். சமீபத்தில் ‘தெலுசு கதா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் ‘நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு, ‘உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன. என்னை பொறுத்தவரை படங்களின் எண்ணிக்கை மட்டும் திறமையை பளிச்சிட வைத்திடாது. திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும். அந்த வகையில் நான் பளிச்சிட்டு வருவதாகவே உணருகிறேன்’, என தெரிவித்தார்.

பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் வர்ஷினி வெங்கட். இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் வர்ஷினி சமீபத்தில் ’சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமீபத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில், ’எதனாலும் என் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது’ என்று டைட்டில் வைத்துள்ளார்.

Talent is what brings us out - Actress Srinidhi Shetty
Talent is what brings us out – Actress Srinidhi Shetty