கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவதால் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே சில்க் சுமிதா வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை அணுகியுள்ளனர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் டாப்சி, கீர்த்தி சனோன் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும், டாப்சி நடிக்க அதிகபடியான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 day ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago