பாலிவுட் நடிகையான டாப்சி, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பயோபிக் படத்தில் டாப்சி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்தை இயக்குனர் ராகுல் தொலக்யா இயக்குவதாக இருந்தது. தற்போது சில காரணங்களால் ராகுல் தொலக்யா இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீஜிட் முகர்ஜி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.