Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாப்ஸி நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியான போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்

Taapsee Movie Poster Update

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி நடித்திருக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இதில் மித்தாலி ராஜாக டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Taapsee Movie Poster Update
Taapsee Movie Poster Update