t-rajendran latest speech-goes-viral
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் டி. ராஜேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, \”அரசியல் என்பது பொது வழி அந்த பொது வழியில் யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்\” என்று பேசினார்.”,
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…