நம் உடலில் வயிற்று புற்று நோயை உறுதி செய்ய சில அறிகுறிகளை வைத்தே நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
முதலில் புற்றுநோய் என்பது நம் உடலில் உள்ள செல்களின் அபரிவிதமான வளர்ச்சியால் ஏற்படும். இதில் பலவகை புற்று நோய்கள் வரும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது சிறந்தது. ஆனால் அந்த அறிகுறிகளை அறிவது அவ்வளவு சுலபம் கிடையாது.
நாம் உண்ணும் உணவு மற்றும் நீர் போன்ற உணவுகளை உண்ணும் போது டியோடினம் பகுதியை சேர்வதற்கு முன்பு அனைத்தும் வாந்தியாக வெளியேறும்.
இதுவே முதல் ஆரம்ப அறிகுறி ஆகும். வயிற்றுப் பகுதியில் வீக்கம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். நம் உணவு குறைவாக சாப்பிட்டாலும் ஏற்படும் நெஞ்செரிச்சலை கண்டிப்பாக கவனித்து மருத்துவரை அணுக வேண்டும்.
நம் வயிற்றில் கட்டி உருவாகி இருந்தால் அது உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் காய்ச்சல் வரக்கூடும் தொடர்ந்து வயிற்று வலி மற்றும் காய்ச்சல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வந்தால் கண்டிப்பாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
மேலும் இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலின் ஆக்சிஜன் அளவு குறைந்து உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
இப்படி உங்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி உடலை சரி செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்.