Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட தகவல்.

susienthiren-gives-health-update-about-vijay-antony

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பைக் போட்டை ஓட்டும் போது விஜய் ஆண்டனி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு முகம் மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டதால் லங்காவியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு விஜய் ஆண்டனியின் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் ஏற்பட்டிருந்த நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்துவிட்டார். அவரை மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க கூறியிருக்கின்றனர். விரைவில் அவர் ரசிகர்களிடம் வீடியோ வாயிலாக பேசுவார், ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் மேலும் தவறான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.