கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சுஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவர் சலகா என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார்.
அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூருவில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சுஷில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் சுஷில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சுஷில்குமார் சென்று இருந்தார்.
அங்கு ஒரு அறையில் திடீரென சுஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து சுஷில்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
ஆனாலும் அவர் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வளர்ந்து வரும் கன்னட நடிகரான சுஷில்குமார் தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…