Alphonse Puthren to Direct Nivin Pauly's 50th Film!
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்பட உலகிலும் தனித்துவமான கிளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோரின் திரையுலக பயணத்திற்கும் இந்தப் படம் முக்கிய தொடக்கமாக அமைந்தது.
மேலும், நிவின் பாலியை முன்னணி நட்சத்திரமாக உயர்த்திய திரைப்படமாகவும் ‘பிரேமம்’ பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. ‘பிரேமம்’ வெற்றிக்குப் பிறகு, அல்போன்ஸ் புத்திரன் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடித்த ‘கோல்டு’ திரைப்படத்தை இயக்கினார். அதேசமயம், சமீப காலங்களில் நடிகராகவும் பல படங்களில் தோன்றி வருகிறார்.
தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் நிவின் பாலியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான 50வது படமாக உருவாகிறது.
படத்தின் தலைப்பு வருகிற ஜூன் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், ‘பிரேமம்’ கூட்டணியின் மீள்வரவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…