Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுதான்.. வைரலாகும் மாஸ் அப்டேட்

Surya 42 Title Look Poster update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று இந்த படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.

ஆமாம் இந்த படத்திற்கு கங்குவா என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌இதோ டைட்டில் லுக் போஸ்டர்