Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகும் புதிய படத்திற்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..

suriya upcoming movie details

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்தியில் உருவாகும் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கிலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் மிக பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவை சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்ட படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

suriya upcoming movie details
suriya upcoming movie details