Suriya to Team Up with Director Shankar
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக கருத்துகளையும், தொழில்நுட்ப பிரம்மாண்டத்தையும் இணைத்து ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை வழங்கிய ஷங்கர், சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கியிருந்தார்.
‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்குப் பிறகு ஷங்கரின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான ‘வேள்பாரி’யை திரைப்படமாக உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் வேள்பாரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யா மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பார் என ஷங்கர் கருதுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் கருப்புசாமி கதாபாத்திரத்தில் சூர்யா வெளிப்படுத்திய தோற்றமும் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தது. இதனால் ‘வேள்பாரி’ கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்கும் வாய்ப்பு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஷங்கரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…