suriya-quit-from-vaadivasal-movie viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்ததை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் நடித்து வந்தார்.
இப்படியான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் இது குறித்த தகவலை வெளியிட்டார்.
இதுவே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக சூர்யா வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் பரவியது. இதனால் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைவதாக கூறி வந்தனர்.
ஆனால் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. இந்தப் படம் திட்டமிட்டபடி உருவாகும் எனவும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள 42வது படத்தில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிக்க தொடங்குவார் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…