வாடிவாசல் நாயகனே அரசியலுக்கு வாங்க என கட்சியின் பெயரோடு சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவகராக தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவி செய்து வருகிறார்.
சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார். இதனால் நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
சமீபத்தில் கூட அவர் நீட் தேர்வு காரணமாக வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவரது அறிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குவிந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்கள் நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் வாடிவாசல் நாயகனே அரசியலுக்கு வாங்க என அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கட்சியின் பெயர் இளம் காளைகள் கட்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் நடிகர் சூர்யா அரசியலில் அடியெடுத்து வைக்க வெகு தூரம் இல்லை எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…