Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 44 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர், காரணம் என்ன தெரியுமா?வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இறுதியாக இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் நடிக்க கமிட்டாகி இந்த படங்கள் இன்னும் தொடங்காமல் இருந்து வருகின்றன. மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் சூரியா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜயகுமார் இடையே கருத்து மோதல் உருவாகியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Suriya 44 movie latest update viral
Suriya 44 movie latest update viral