Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?வைரலாகும் தகவல்

suriya-42-latest-shooting-update

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சூரியா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினியாக நடிக்க, ஆனந்தராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சூர்யா 42 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இலங்கைக்கு செல்ல உள்ளனர், மேலும் அங்கு பிரம்மாண்டமான காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.