Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் அறுவை சிகிச்சை குறித்து விளக்கம் கொடுத்த மேனேஜர் சுரேஷ் சந்திரா

suresh-chandra-about-actor-ajith-treatment update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் துணிவு.

இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு மூளையில் சிறிய கட்டி இருந்து அதை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் இது குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதாவது அறுவை சிகிச்சை நடந்தது மூலையில் இல்லை எனவும் காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது. இதன் காரணமாகவே அறுவை சிகிச்சை நடந்தது என தெரிவித்துள்ளார்.

suresh-chandra-about-actor-ajith-treatment update
suresh-chandra-about-actor-ajith-treatment update