கோலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது வரை ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய திறமைமிக்க நடிப்பால் முதன் முதலில் ‘முள்ளும் மலரும்’ என்ற திரைப்படத்துக்காகத் தமிழக அரசு விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது மற்றும் இந்தியாவின் தலைசிறந்த விருதான பத்ம விபூஷன் விருது கடந்த 2016 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு புதிய விருது கிடைத்துள்ளது.
அதாவது இந்த ஆண்டுக்கான “அம்ரித் ரத்னா” விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு, பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 18 நிறுவனம் வழங்கியுள்ளது. இது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருவதோடு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து வருகின்றனர்.
